"கொரோனாவின் 6-ஆம் அலையில் சிக்கிய ஸ்பெயின்!"..

#Corona Virus
Keerthi
3 years ago
"கொரோனாவின் 6-ஆம் அலையில் சிக்கிய ஸ்பெயின்!"..

ஸ்பெயின் அரசாங்கம் மக்கள் வீதிகளில் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

ஸ்பெயின் நாட்டில் மீண்டும் முகக்கவசம் அணியும் விதிமுறை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த ஆவணங்கள் அமைச்சரவை கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட உள்ளதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறியிருக்கிறார். அந்நாட்டில் கடந்த ஜூன் மாதத்தில், இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் மக்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு தற்போது கொரோனாவின் 6-அலை பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் அங்கு நேற்று மட்டும் சுமார் 25,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!